search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா டெஸ்ட்"

    அலஸ்டைர் குக் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கும் மேல் அடித்து அசத்தல் சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய குக் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் விளாசி சாதனைப் படைத்தார்.

    தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தோடு அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.


    2006-ல் சதம் அடித்த சந்தோசத்தில் அலஸ்டைர் குக்

    இதன்மூலம் அறிமுக டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும், கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற அசத்தல் சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ப்ரூஸ் மிட்செல் இந்த அரிய சாதனையைப் படைத்துள்ளார்.
    வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் இருந்தார்கள். மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சாஹல் இடம்பிடித்தார்கள்.

    இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். வாய்ப்பு கிடைத்தபோது அதில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பிளாட் பிட்ச்-யில் கூட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு தொடரில் லெக் ஸ்பின்னர்கள் இடம்பிடித்திருப்பது சிறப்பான விஷயம். இது உலகளவில் பிரபலமாகி வருகிறது’’ என்றார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

    அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


    ஜென்னிங்ஸ்

    அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


    ஜோ ரூட்

    முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×